நள்ளிரவில் வீட்டுக்குள் கேட்ட திடீர் சத்தம்..! எழுந்து சென்ற கணவன் - மனைவி..! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
ஈரோடு அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் - மனைவியை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அடுத்த திருக்கல்காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி-பருவதம் தம்பதியினர். விவசாயம் செய்துவரும் இவர்கள் நேற்று முதல் நாள் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, யாரோ வீட்டு கதவை உடைப்பதுபோல் சத்தம் கேட்டு, இருவரும் எழுந்து சென்று பார்த்தபோது மர்மநபர்கள் கட்டையால் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் கணவன் - மனைவி இருவரும் மயக்கமடைய பிரோவில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், செல்போன்களை கொள்ளை அடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்து பீரோவை பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்த துரைசாமி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வீடு புகுந்து மர்மநபரக்ள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.