தமிழகம்

தமிழகத்தில் புது உச்சம்..! இதுவரை இல்லாத அளவுக்கு இன்று புதிய கொரோனா பாதிப்புகள்.! ஒரே நாளில் 771 பேர் பாதிப்பு.!

Summary:

Corono tamilnadu and chennai current count

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4826 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பலமடங்கு அதிகரித்துள்ளது. 50 , 60 என பாதிப்புகள் அதிகரித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக 500 கும் மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4826 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று இருவர் உயிர் இழந்துள்ள நிலையில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1516 ஆக உள்ளது.


Advertisement