கொரோனவை தடுக்க பேருந்து முழுவதும் வேப்பிலை கட்டி மாட்டுச்சாணம் தெளித்த மக்கள்.! வைரல் புகைப்படம்.corono-precaution-in-covai-government-bus

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பெரும் பிரச்னையாகிவருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில், அரசு பேருந்து ஒன்றுக்கு வேப்பிலை, துளசி கட்டி மஞ்சள், மாட்டுச்சாணம் தெளிந்த சம்பவம் வைரலாகிவருகிறது. கோவை காந்திபுரத்தில் இருந்து பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை வழித்தடத்தில் நாதேகவுண்டன்புதூர் வரை இயக்கப்பட்டு வருகின்ற அரசுப் பேருந்து 14-இல் நாதேகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.

பேருந்தின் உட்புறமும், வெளிப்புறமும் வேப்பிலை மற்றும் துளசியை கட்டி தொங்கவிட்டுள்ளனர். மேலும், பேருந்தின் படிக்கட்டு, நடைப்மேடை ஆகியவற்றில் மஞ்சள் கரைசல், மாட்டுச்சாணம் ஆகியவற்றை தெளித்துள்ளனர். இவை அனைத்தும் கிருமி நாசினி என்பதால் கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்ததாக அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.