தமிழகம் Covid-19

Breaking#: வடபழனி கோவில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரொனா உறுதி! பரவியது எப்படி?

Summary:

Corono positive on flower sellers at vadapalani

சென்னை வடபழனி கோவில் வாசலில் பூ வியாபாரம் செய்துவந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களாகவே எண்ணிக்கை 100 யை கடந்து செல்கிறது.

தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட் மிகவும் எச்சரிக்கையான பகுதியாக கருதும் நிலைக்கு ஆளாகி வருகிறது. காரணம் மார்க்கெட்டில் வியாபாரம் செய்தவர்கள், சலூன் கடைக்காரர், பொருள் வாங்க சென்றவர்கள் என அடுத்தடுத்து கொரோனா உறுதியாகி வருகிறது.

தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிவந்து வடபழனி கோவில் வாசலில் பூ விற்று வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி வடபழனியை சுற்றியுள்ளவர்களையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்போது அந்த பூ வியாபாரிகளிடம் யாரெல்லாம் பூ வாங்கினார்கள், அவர்களுக்கும் கொரோனா பரவியிக்குமா என கண்டறிவது சுகாதாரதுறைக்கு ஒரு சவாலாக அமையவுள்ளது. சமூக பரவல் அதிகமாக துவங்கினால் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு விளைவை ஏற்படுத்தும் என எண்ணும்போதே மிகவும் வேதனையாக உள்ளது.


Advertisement