மருத்துவரின் முகத்தில் எச்சிலை துப்பி கொரோனோ நோயாளி அட்டூழியம்! திருச்சி மருத்துவமனையில் பரபரப்பு!

மருத்துவரின் முகத்தில் எச்சிலை துப்பி கொரோனோ நோயாளி அட்டூழியம்! திருச்சி மருத்துவமனையில் பரபரப்பு!


corono-patient-split-on-doctor-face-in-trichy

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் தமிழகத்தில்  மட்டும் 969 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

 இவற்றில் திருச்சியில் மட்டும் 39 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

trichy

 இந்நிலையில் இன்று காலை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் திடீரென மருத்துவரின் முகத்தில் எச்சில் துப்பி, தனது மாஸ்க்கை கழட்டி அவரது முகத்தில் வீசியுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்  அந்த நபர் மீது கொலைமுயற்சி என  போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.