தீவிரமாகும் கொரோனா..! தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு..! வெளியே வருவதைத் தவிர்ப்போம்.!

தீவிரமாகும் கொரோனா..! தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு..! வெளியே வருவதைத் தவிர்ப்போம்.!



Corono full lock down in tamilnadu

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்குமுறை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போதுவரை ஊரடங்குமுறை நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து மக்கள் நடமாட்டம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

corono

அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனால் காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள்,மதுக்கடை  செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் குறைந்த அளவில், ஒருசில இடங்களில் மட்டும் பெட்ரோல் பங்குகள் செயல்படும். மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும்.