"இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிட கூடாது.. வீட்டிலிருந்தே போராட வேண்டிய நேரம் இது.." நடிகர் சூர்யாவின் வீடியோ!

இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிட கூடாது என்றும் வீட்டிலிருந்தே போராட வேண்டிய நேரம் இது என சூர்யா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சூர்யா, "கொரோனா வைரஸ் நாம் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. நாம் பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு. வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டு என ரோட்டில் இறங்கி போராடிய நாம் இப்போது வீட்டிலிருந்து போராட வேண்டும்.
சைனாவை விட இத்தாலியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட காரணம் அறியாமையால் அப்பாவி மக்கள் வெளியில் நடமாடியது தான். இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிட கூடாது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட்டு ஒரு மீட்டராவது விலகி இருக்க வேண்டும் வெளியில் சென்று வந்தால் முகம் கை கால்களை கழுவ வேண்டும் என கூறுகிறார்கள். அதனை கடைபிடியுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்லவும்" எனவும் இன்னும் சில அறிவுறைகளும் கூறியுள்ளார்.
Let's all stay home and stay safe🙏#IndiaFightsCorona@Vijayabaskarofl @TNDeptofHealth @MoHFW_INDIA pic.twitter.com/q2BuBYDvvU
— Suriya Sivakumar (@Suriya_offl) March 22, 2020