தமிழகம்

கொரோனா பாதிக்கபட்ட நடிகர் செந்தில் மருத்துவமனையிலிருந்து வெளியிட்ட வீடியோ! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்து வந்திருந்த நிலையில் தற்போது ம

கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்து வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலை பரவத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நடிகர் செந்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உண்மைதான். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கேன். கொரோனா வந்தா யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்து விட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். 
மருத்துவர்கள் கூறும் மருந்து மாத்திரைகளை  சாப்பிடுங்கள். 


 
எனக்கு தடுப்பூசி போட்டதால் பெரியளவில் பாதிப்பு இல்லை. அதேபோல் நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உடம்பிற்கு நல்லது. நாளை டெஸ்ட் எடுத்து முடித்தவுடன் வீட்டிற்கு செல்லலாம், பின்னர் வீட்டில் இருந்தே சிகிச்சையை தொடரலாம்  என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.


Advertisement