தமிழகம்

தமிழகத்தில் இன்று 4, 496 பேருக்கு கொரோனா உறுதி! ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவா?

Summary:

Corono affected people counts in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 4, 496 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இதில்  அதிகபட்சமாக ஒரேநாளில்  சென்னையில் 1,291 பேருக்கு, மதுரையில் 341 பேருக்கு, திருவள்ளூரில் 278 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரனோ பாதிப்பால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக கொரோனாவிலிருந்து  மீண்டு வீடு திரும்பியவர்களின்  எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement