மேடம் கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வெளியே வாங்க... செவிலியர்களை அழைத்து வழக்கறிஞர் செய்த நெகிழ்ச்சி செயல்.!



coronas-patient-came-back-jasmine-flower-nurses-feet

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயிலிருந்த வழக்கறிஞர் மீண்டு வீடு திரும்பும் முன்பு செவிலியர்களின் பாதங்களில் மலர் தூவி நன்றி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் மணிமாறன். இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை ஐசுலேசன் வார்டில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அதன்பின் தொடர் இருமல் மற்றும் மூச்சு விடுவதற்கு சிரமமான நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறையால் முழுவதும் குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பும் முன்பு மணிமாறன் செவிலியர்களை ஹாஸ்பிட்டல் வெளியே வரவழைத்து அவர்களின் பாதங்களில் மலர் தூவி கை எடுத்து கும்பிட்டு நன்றி செலுத்தியுள்ளார். மணிமாறனின் இச்செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.