சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!
தமிழகத்தில் இன்று மட்டும் இவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு.! மொத்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 983 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 57 பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதல் தரும் விதமாக 5,768 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.