தயவு செய்து வீட்டிலையே இருங்க!! இன்றுமட்டும் கொரோனாவுக்கு எத்தனைபேர் பலி தெரியுமா?? பதறவைக்கும் எண்ணிக்கை..



Corona tamilnadu positive cases today

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 6538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 15,31,377  ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்றும் மட்டும் 20037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்