தமிழகம் Covid-19

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை க

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,96,516ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மேலும் 2,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் அதிகப்படியாக கோவையில் ஒரே நாளில் 3488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 478 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,232 ஆக உயர்ந்துள்ளது. 91 பேர் தலைநகர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 258 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 220 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று மட்டும் 31,223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Advertisement