தமிழகம் Covid-19

மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.!

Summary:

தமிழகத்தில் இன்று புதிதாக 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைத்துக்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,16,132 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,096 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,747பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement