மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்! மருத்துவர்கள் கூறுவது என்ன?

மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்! மருத்துவர்கள் கூறுவது என்ன?



corona-patient-cure-within-3-days

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3200 க்கு அதிகமாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருவாண்ணாமலையில் பெரும்பாலானோர் அரசு மருத்துமனைகளில் ஆங்கில மருத்துவம் பெற்றுவரும் நிலையில், பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில் சித்த வைத்திய முறைப்படி நோயாளிகளை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த மருத்துவமனையில் தற்போது 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு நோயாளிக்கு மூன்றே நாட்களில் மறு பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என்று வந்து அவர் குணமாகி விட்டார். இதையடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். சித்த மருத்துவத்தின் மூலம் மூன்றே நாளில் ஒருவருக்கு குணமடைந்து நெகட்டிவ் என்று வந்ததில் மகிழ்ச்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

sidha

மேலும் இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகையில், அங்கு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு முதலில் காலையில் மஞ்சள்தூள், உப்பு இவற்றை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வைப்போம். இதனால் தொண்டை சுத்தமாகும். கிருமி ஒழிக்கப்படுகிறது. பின்னர் சித்த மருத்துவம் யோகாசனப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

கபசுரக் குடிநீர் மற்றும் சித்த மருந்துகளாக இஞ்சிச்சாறு தேன் கொடுக்கப்படுகிறது. பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், மஞ்சள் மர மஞ்சள் சேர்த்து மூலிகை தேனீர் கொடுக்கப்படுகிறது. மேலும் பல சத்தான உணவுகளும் வழங்கப்படுகிறது. இரவு உப்பு மஞ்சள் தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமே இவர்கள் மூன்று நாளில் குணமாக்கப்படுகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.