தெரியுமா?? தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு!! எதற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ

தெரியுமா?? தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு!! எதற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ


Corona lockdown new rules for tamil nadu

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 10 -ஆம் தேதி காலை 4 மணிக்கு தொடங்கும் இந்த ஊரடங்கு மே மாதம் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் எவை எவை இயங்கும், எவற்றிற்கெல்லாம் தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

* பால், பத்திரிகை, தனியார் விரைவுத் தபால் சேவை மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் இயங்க எந்த தடையும் இல்லை.

* விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.

* மாட்டுத்தீவனம், வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர எந்த தடையும் இல்லை.
 
* Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

* ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செயல்படும், நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

* திருமணம்  மற்றும் அதனை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* முழு ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.