தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் எத்தனை பேர் மரணம் தெரியுமா? அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை..

Summary:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,581 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,581 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 1,344 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3,581 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,99,807 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,813 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன்மூலம் கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 8,65,071 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 12,778 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


Advertisement