ஆத்தாடி.. தமிழகத்தில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா பாதிப்பு.! சென்னையில் மட்டும் 2,481-பேருக்கு தொற்று உறுதி.!corona-increased-in-tamilnadu-xw2rvd

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பரவல் சமீப காலமாக ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும்  2,481-பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,577-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 668- பேர் குணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.