தமிழகம் Covid-19

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் வேகமெடுக்கும் கொரோனா.! கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா.?

Summary:

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம்

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் மதியம் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மேலும் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 197 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 22,381 பேர் குணமடைந்த நிலையில் 1,35,355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement