90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 14 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,373 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.