தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் தான் கொரோனா பரவல் அதிகம்.! சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்.!



corona-increased-in-tamilnadu-K2RAWY

உலகத்தையே உலுக்கிய கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் வேகமாக பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சற்று அதிகரித்து வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

corona

தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.