தமிழகம் Covid-19

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.! ஆனால் கோவையில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்த

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்திய பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய துவங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 22ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 2779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலே அதிகப்படியாக கோவையில் மட்டும் 4734 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement