மீண்டும் பழயபடியா...!! தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! மக்களே உஷார்.!

மீண்டும் பழயபடியா...!! தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! மக்களே உஷார்.!


corona-increased-in-tamilnadu-BCSFGV

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பரவல் சமீப காலமாக ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,67,432 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும்  நேற்று ஒரே நாளில் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.