தமிழகம் Covid-19

தமிழகத்தில் நேற்று மட்டும் இவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பா!! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆரம்ப

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

தமிழகத்தில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாகாக 4,086 பேருக்கும் செங்கல்பட்டில் 1,163 பேருக்கும், கோவையில் 1,004 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 671 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1,00,668பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 31,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement