தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.? அதிகரித்த பலி எண்ணிக்கை.!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.? அதிகரித்த பலி எண்ணிக்கை.!


corona increased in tamilnadu

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona

இதனால், தமிழக்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும்16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.