தமிழகம் Covid-19

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பா!! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. ஆரம்பத்தில் வேகமாக பரவிய

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 7 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 29 பேர் உயிரிழந்தனர். 

சென்னையில் மட்டும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,176 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 58,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement