தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை எவ்வளவு? - TamilSpark
TamilSpark Logo
இந்தியா மருத்துவம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை எவ்வளவு?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று 1,358 பேர் குணமடைந்திருப்பதால், பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 34,112 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo