தமிழகம் Covid-19

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.! கட்டுப்பாட்டு பகுதிகளாக மாறும் 10 தெருக்கள்.!

Summary:

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை க

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அந்தத் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் என்று சென்னை மாநகராட்சி  உத்தரவு பிறப்பித்தது.

சென்னை முழுவதும் மொத்தம் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளது. இதில் 10 தெருக்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த 10 தெருக்கள் கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா நோய் தொற்று பரவுவதை குறைக்கலாம். மேலும், மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement