தமிழகம் Covid-19

மதுரை மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

Summary:

மதுரை மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. இந்த நிலையில் அரசு அறிவித்த தளர்வுகளின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரியிலும் முதுகலை மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி  வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மதுரை அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுடன் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, பாராமெடிக்கல் படிப்பு மாணவிகள் 2 பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவிகள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,392 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதுவரை மதுரையில் 223 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மதுரையில் கொரோனாவால் நேற்று உயிரிழப்பு இல்லை.


Advertisement