BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அதிரடியாக உயர்ந்த சிலிண்டரின் விலை... அதிர்ச்சியில் மக்கள்!!
இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாதம் ஒருமுறை வணிக மற்றும் சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் தற்போது நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்துள்ளது. 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை கடந்த மாதம் ₹1898 ஆக இருந்த நிலையில் இன்று மாதத்தின் முதல் நாளிலேயே ரூ. 101 உயர்ந்து ரூ. 1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து ரூ. 918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.