தமிழகம்

ஆள் பாக்கதான் குழந்தை முகம்.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே.. பலவிதமான இளம் பெண்கள்.. கொட்டிக்கிடந்த புகைப்படங்கள்..

Summary:

கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞரை போல

கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடங்கி அதில் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் மாணவி தனது ஆபாச புகைப்படம் ஒன்று இணையத்தில் பதிவிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பதறிப்போன பெற்றோர் இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் ஆபாச புகைப்படத்தை பதிவு செய்த ஐபி முகவரியை கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து ஐபி முகவரியை ஆதாரமாக கொண்டு சேலம் மாவட்டம் அஷ்தம்பட்டியைச் சேர்ந்த பரசுராமன் (19) என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் பரசுராமன் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்க்கு உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் பரசுராமனின் தொலைபேசியை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அவரது செல்போனில் ஏராளமான இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து, ரசித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் புகைப்படங்களை மார்பிங் செய்வதற்காகவே பிரத்யேக செயலி ஒன்றையும் பரசுராமன் பயன்படுத்திவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உறவினரான அந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது புகைப்படங்களை அனுப்பி பரசுராமன் அந்த பெண்ணுடன் பழக முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை கண்டுகொள்ளவில்லை என்பதால், அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து குற்றவாளி பரசுராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement