அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கல்லூரி மாணவிக்கு வீடியோ காலில் செக்ஸ் டார்ச்சர்: கல்லூரி மாணவர் கைது...!!
கல்லூரி மாணவிக்கு, வீடியோ காலில் பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி, பாரிமுனையில் இருக்கும் தனியார் மகளிர் கலை கல்லூரியில், இரண்டாம் வருடம் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வருவது வழக்கம். அதே பேருந்தில் பயணிக்கும் ஆர். கே. நகர் அரசு கலைக் கல்லூரியில், பி.ஏ படித்து வரும் வண்ணாரபேட்டையை சேர்ந்த பரத் (19 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். அடிக்கடி வீடியோ கால்,வாட்ஸ் அப் சாட்டிங் மூலம் பேசி வந்து உள்ளனர். இந்நிலையில் மாணவியும், கல்லூரி மாணவன் பரத்தும் வீடியோகாலில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவன் பரத் மாணவியின் ஆடையைக் கழட்டுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். மேலும் ஆபாசமாக பேசியுள்ளார். நண்பனாக நினைத்த நபர் இது போன்ற செயலை செய்ததை கண்ட மாணவி அதிர்ச்சியில் அவரது போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
தொடர்ந்து பரத், அந்த மாணவிக்கு போன் செய்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மாணவி, சம்பவம் குறித்து பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் கூறினார். இதை தொடர்ந்து பெற்றோர் மற்றும் மாணவி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.