பெண் கேட்க சென்றபோது வெடித்த தகராறு.! ஆத்திரத்தில் காதலன் செய்த பயங்கரத்தால் துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி!!

பெண் கேட்க சென்றபோது வெடித்த தகராறு.! ஆத்திரத்தில் காதலன் செய்த பயங்கரத்தால் துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி!!


college-girl-killed-by-lover-for-breakup-the-love

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூர் வேல்முருகன் குடியிருப்பில் வசித்து வந்தவர் 22 வயது நிறைந்த சினேகா. இவர் கல்லூரி மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த
கண்ணன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. கண்ணன் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் சினேகாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கண்ணன் மற்றும் சினேகா இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முற்பட்டுள்ளனர். ஆனால் அதில் சினேகாவிற்கு முழு விருப்பம் இல்லாத நிலையில் கண்ணனை தனது வீட்டிற்கு பெண் கேட்டு வர கூறி வற்புறுத்தியுள்ளார்.

lover

அவரும் சினேகாவின் பேச்சை கேட்டு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சினேகா வீட்டிற்கு சென்று பெண் கேட்டு சென்றுள்ளனர். அங்கு இருவர் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளிவிட பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளது. அதனை தொடர்ந்து சினேகா கண்ணனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கண்ணன் சினேகாவிடம் கடைசியாக பேசவேண்டும் என அழைத்துள்ளார். அவரும் வந்த நிலையில் அங்கு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கண்ணன் அங்கிருந்த சென்ட்ரிங் கம்பியால் சினேகாவின் தலையில் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சினேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.