தமிழகம்

இறைச்சி கடைகள் எப்போதும் போல செயல்படலாம்.. கலெக்டர் அறிவிப்பு.!

Summary:

Collector-cancels-order-issued-by-Municipal-Commissioner-to-close-meat-shops-for-10-days

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், மிருகவதை சட்டத்தின் படியும் பரூஷன் பர்வா அனுசரிக்கப்பட உள்ளதால் எந்த ஒரு விலங்கையும் கொல்லக்கூடாது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் போன்ற இறைச்சி விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பை தேனி மாவட்ட கலெக்டர் ரத்து செய்துள்ளார். மேலும் இறைச்சி கடைகள் எப்போதும் போல செயல்படலாம் என அனைத்து மாவட்ட போரூராட்சிகளின் செயல் அலுவலகங்களுக்கு உத்தரவு நகலை கலெக்டர் அனுப்பியுள்ளார். 


Advertisement