இளைஞரை கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்; பதறவைக்கும் சம்பவம்.!

இளைஞரை கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்; பதறவைக்கும் சம்பவம்.!


Coimbatore Youth Killed by Minor Boy 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்படும்போது பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பிரணவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

இவரை கொலை செய்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞரை கொலை செய்ததாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்து இருக்கிறார். 

அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.