12 துண்டுகளாக உடலை வெட்டி கொடூர கொலை; கள்ளக்காதலிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கதறக்கதற நடந்த பயங்கரம்.!

12 துண்டுகளாக உடலை வெட்டி கொடூர கொலை; கள்ளக்காதலிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கதறக்கதற நடந்த பயங்கரம்.!


Coimbatore Thudiyalur Man Killed Body Cut of 12 Pieces Affair Issue

கள்ளக்காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை, கள்ளக்காதலி தனது மற்றொரு கள்ளக்காதலனை ஏவி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் சாலை ஓரத்தில் குப்பைத்தொட்டியில் வாலிபர் ஒருவரின் இடதுகை வெட்டப்பட்ட நிலையில்இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்த துடியலூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகையில் கொலையுண்டு இருந்தவர் ஈரோடு மாவட்டம் சங்கராபாளையம் பகுதியில் வசித்து வரும் பிரபு (வயது 39) என்பது தெரியவந்தது. 

இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அழகு நிலையம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபு சிக்கிய நிலையில், கொலை செய்யப்பட்டு உடலை 12 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட பகீர் தகவலும் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக பிரபுவின் கள்ளக்காதலி கவிதா (வயது 39), கணபதி மாநகரை சேர்ந்த அமுல் திவாகர் (வயது 34), அவரின் உறவினர் கார்த்திக் (வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில், அமுல் திவாகரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலமானது வெளியானது. அதாவது, ஒண்டிப்புதூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் எனக்கும், கவிதாவுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தோம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே கவிதா மன உளைச்சலோடு இருந்த வந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, பிரபுவின் செல்போனில் தனது அந்தரங்க படம் இருப்பதாகவும், அதனை காட்டி அவர் பாலியல் தொல்லை செய்வதாகவும் கூறினார். 

Coimbatore

மேலும், அவரை தீர்த்த கட்டினால் நாம் உல்லாசமாக இருக்க முடியும் என்று தெரிவித்தார். இதன்படி, நாங்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்ய தயாரானோம். கவிதா சம்பவத்தன்று பிரபுவுடன் பேச வேண்டும் என்று அவரை வரவழைத்த நிலையில், நானும் கார்த்திக்கும் சேர்ந்து பிரபுவை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கத்தியை எடுத்து பிரவீனின் கழுத்தில் வேகமாக குத்தி கொலை செய்தோம். 

பின், உடலை என்ன செய்வது என்று தெரியாமல்,  நான் எலக்ட்ரீசியன் என்பதால் கம்பிகளை வெட்டும் மெஷினை வைத்து பிரபுவின் கை, கால், மார்பு போன்றவற்றை பையில் அடைப்பதற்கு வசதியாக 12 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் உடலை வீசினோம். ஆனால் காவல்துறையினர் இறுதியில் எங்களை கண்டுபிடித்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளான். இதனையடுத்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.