நைட்ரஜன் வாயுவை சுவாசித்து முன்னாள் கல்லூரி பேராசிரியர் தற்கொலை: கோவையில் பகீர் சம்பவம்.!

நைட்ரஜன் வாயுவை சுவாசித்து முன்னாள் கல்லூரி பேராசிரியர் தற்கொலை: கோவையில் பகீர் சம்பவம்.!



Coimbatore Pollaci Professor Suicide 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, நேதாஜிபுரம் பகுதியில் வசித்து வருபவர் தனப்பிரபு (வயது 33). இவர் வேதியியல் முதுகலை பட்டதாரி ஆவார். கோவை நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். வேலை காரணமாக சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் பாரதி நகரில் வீடெடுத்து தங்கி இருக்கிறார். 

இவர் வேதியியல் ஆய்வுகூடத்தில் நைட்ரஜன் வாயு சம்பந்தமாக மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்து வந்துள்ளார். இதனிடையே, திடீரென பணியில் இருந்து விலகியவர், வீட்டில் இருந்தவாறு சிறப்பு வேதியியல் வகுப்பு நடத்தி வந்துள்ளார். 

வீட்டில் நைட்ரஜன் சிலிண்டரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தவர், தற்கொலை செய்ய முடிவெடுத்து நைட்ரஜன் வாயுவை திறந்துவிட்டு, விஷவாயுவை வலுக்கட்டாயமாக முகர்ந்து மயங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரின் வீட்டில் ஒன்றரை நாளுக்கும் மேலாக ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், விஷவாயுவின் நாற்றத்தை உணர்ந்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நைட்ரஜன் வாயுவை திறந்துவிட்டு பேராசிரியர் தற்கொலை செய்தது அம்பலமானது. படுக்கை அறையில், "எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை" என கைப்பட எழுதி வைத்துள்ளார். 

விசாரணையில், பேராசிரியருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. அவரின் வங்கிக்கணக்கில் இலட்சக்கணக்கில் பணம் சேமித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்துள்ளார். அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.