பொள்ளாச்சி பகுதியில் நடந்த தொடர் திருட்டு சம்பவம்; குற்றவாளி கைது.. விசாரணையில் பகீர் பின்னணி.!

பொள்ளாச்சி பகுதியில் நடந்த தொடர் திருட்டு சம்பவம்; குற்றவாளி கைது.. விசாரணையில் பகீர் பின்னணி.!


Coimbatore Pollachi Robbery Case Accuse Arrested by Cops 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தது. இதனால் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்தார். 

இதன்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்பேரில், மதுரையை சேர்ந்த இராமச்சந்திரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். 

இவர் பகலில் கட்டிட தொழிலாளி போல வேலைபார்த்து வந்த நிலையில், இரவில் கொள்ளையனாக வலம்வந்து இருக்கிறார். இவர் சமீபத்தில் தான் கோட்டூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். 

மொத்தமாக அவரிடம் இருந்து ரூ.28 இலட்சம் பணம் மற்றும் 56 சவரன் நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.