மனநலம் பாதிக்கப்பட்ட மகள்.. வயதான தாய் எடுத்த விபரீத முடிவு.!



Coimbatore Pollachi Mother Kills Daughter and Suicide Eat Poison Food

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, டி. நல்லிக்கவுண்டன்பாளையம் பகுதியை சார்ந்தவர் இரத்தின சபாபதி. இவரது மனைவி கலாமணி (வயது 65). இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவரது மகள் பிரியா (வயது 39). பிரியா சிறுவயதில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 

இரத்தின சபாபதி கடந்த 35 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், கலாமணி தனது மகளை தனியே கவனித்து வந்துள்ளார். வயோதிகம் காரணமாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தனியாக கவனிக்க இயலாமலும் கலாமணி அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதனையடுத்து, உச்சகட்ட மனவேதனையில் இருந்த கலாமணி மகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்த கலாமணி, உணவில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்துள்ளார். 

Coimbatore

உணவை சாப்பிட்ட பிரியாவும் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட, விஷம் கலந்த உணவை தானும் சாப்பிட்டு கலாமணி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கலாமணியின் வீட்டில் இருவரும் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளச்சி காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.