பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம்; 17 வயது தங்கையை கர்ப்பமாக்கிய 22 வயது அண்ணன்.. தமிழகமே அதிர்ச்சி.!
17 வயது சிறுமியை சொந்த அண்ணனே சீரழித்து கர்ப்பமாக்கிய பயங்கரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அலறித்துடித்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அறிந்து அதிர்ந்துபோன பெற்றோர் செய்வதறியாது திகைக்க, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுமிக்கு நேற்று குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மாணவியிடம் விசாரித்தும் அவர் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் 22 வயது அண்ணனால் தங்கை பலாத்காரம் செய்தது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் 22 வயது நபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.