குடும்பம் நடத்த மறுத்த மனைவி கத்தியால் குத்திக்கொலை; குடும்ப சண்டை மனைவியின் கதைமுடித்த பயங்கரம்.!

குடும்பம் நடத்த மறுத்த மனைவி கத்தியால் குத்திக்கொலை; குடும்ப சண்டை மனைவியின் கதைமுடித்த பயங்கரம்.!


Coimbatore Pollachi Man Killed Wife 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, தொப்பம்பட்டி புதுகாலனி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் @ டேவிட் (வயது 34). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். 

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கற்பகம் (வயது 33) என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், மூன்று குழந்தைகளும் தம்பதிகளுக்கு இருக்கின்றனர். 

கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் - கற்பகம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆறுமுகம் மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் இருக்கும் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். 

கடந்த சில வாரமாகவே பொள்ளாச்சி பகுதியில் நடந்த பெயின்டிங் வேளைக்கு தினமும் சென்றுவந்தவர், தொப்பம்பட்டி பகுதியில் இருக்கும் வீட்டிற்கும் சென்றுள்ளார். மனைவி கற்பகத்திடம் சேர்ந்து வாழலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். 

இதற்கு கற்பகம் எதிர்ப்பு தெரிவிக்கவே, தம்பதிகளிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு, மனைவியின் வீட்டிற்கு சென்ற ஆறுமுகம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். 

ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டு, இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர். ஆடிஹரமடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை தாக்கிவிட்டு தப்பி சென்றிருக்கிறார். கத்திக்குத்து காரணமாக காயமடைந்த கற்பகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவான ஆறுமுகத்தை பல்லடத்தில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.