சிறுமியை காதல் மனைவியாக்கி முகத்தில் கத்தியால் குத்திய கணவன்.. காதல் பெயரில் தாலிகட்டி பயங்கரம்.!

சிறுமியை காதல் மனைவியாக்கி முகத்தில் கத்தியால் குத்திய கணவன்.. காதல் பெயரில் தாலிகட்டி பயங்கரம்.!


coimbatore-pollachi-husband-murder-attempt-wife

 

தன்னுடன் வறுமைக்காக வேலைபார்த்து வந்த சிறுமியை திருமணம் செய்து, குடிபோதையில் தினமும் தகராறு செய்து இறுதியில் கொலை முயற்சியில் இறங்கிய பயங்கரம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில், 17 வயது சிறுமி தனது பெற்றோரோடு வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். 

அப்போது, தன்னுடன் பணியாற்றிய உடுமலை காந்தி சதுக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்ட நிலையில், கணவன் - மனைவியாக வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், மதுஒபோதைக்கு அடிமையான மணிகண்டன் சிறுமியிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளான். 

Coimbatore

இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுமி தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிடவே, நேற்று பொள்ளாச்சி சென்ற மணிகண்டன் சிறுமியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த விசயத்திற்கு சிறுமி மறுப்பு தெரிவித்த காரணத்தால் ஆத்திரமடைந்த மணிகண்டன், மறைத்து எடுத்து வந்த கத்தியை வைத்து சிறுமியின் முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.  

மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.