காதலன், 3 கிழட்டு காமுகன்களால் சிறுமி பலாத்காரம்.. கோவையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சி சம்பவம்.! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.!!

காதலன், 3 கிழட்டு காமுகன்களால் சிறுமி பலாத்காரம்.. கோவையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சி சம்பவம்.! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.!!


Coimbatore Pollachi 16 Aged Minor Girl Abused by 3 Others

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்த இளைஞனின் செயலால், 3 கிழட்டு காமுகர்கள் சிறுமியிடம் வெவ்வேறு சூழ்நிலையில் ஆதரவளிப்பது போல நடித்து அத்துமீறிய பயங்கரம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி விக்னேஷ் (வயது 20) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். 

இந்த சிறார் காதல் ஜோடிக்கு மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விக்னேஷின் உறவினரான ஈஸ்வரன் (வயது 50) என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதில், விக்னேஷ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை அறிந்த விக்னேஷ் கருவை கலைக்க தாத்தா சின்னசாமி (வயது 50) என்பவரிடம் தெரிவித்து இருக்கிறார். 

அவரும் சிறுமியிடம் ஆறுதலாக பேசுவது போல் நடித்து பேத்தி வயதுள்ள சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி பித்து பிடித்தார் போல திரிய, அர்ஜூஜன் உள்ளூர் மந்திரவாதி அர்ஜுனன் (வயது 60) என்பவரிடம் சிறுமியை அழைத்து சென்றுள்ளான். அங்கு சிறுமியிடம் காம பூசாரியும் அத்துமீறியுள்ளார். 

Coimbatore

ஒருசமயத்தில் சிறுமியின் வயிறு பெரிதாகிக்கொண்டே செல்ல, காதலியான சிறுமி காதலனிடம் திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்ய பழனிக்கு சென்றுள்ளனர். மகளை காணாது தேடிய பெற்றோர் 2 வாரங்களுக்கு முன்னதாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென சிறுமி வீடு திரும்பியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேற்கூறிய பகீர் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விக்னேஷின் தாத்தா சின்னசாமி, மந்திரவாதி அர்ஜூஜன், ஈஸ்வரன் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகியுள்ள விக்னேஷ் தேடப்பட்டு வருகிறார்.