காதல் பெயரில் சிறுமியிடம் அத்துமீறிய பயங்கரம்.. வயிற்று வலியால் துடித்த சிறுமி, மருத்துவமனையில் பேரதிர்ச்சி.!Coimbatore Anaimalai 16 Aged Minor Girl Sexual Abused By Driver Love Trap

16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, சத்திரப்பட்டி பகுதியை சார்ந்தவர் கணேஷ் ரகுநாத் (வயது 23). இவர் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரின் சகோதரி வீடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் உள்ளது. 

இதனால் கணேஷ் ரகுநாத் அவ்வப்போது சகோதரியின் இல்லத்திற்கு சென்று வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமியுடன், கணேஷ் ரகுநாத் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சிறுமி பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை காதலாக மாற்றிய கணேஷ் ரகுநாத், சிறுமியுடன் செல்போனில் பேசி அதனை வளர்த்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது நேரில் சந்தித்தும் காதலர் வளர்ந்துள்ளது.

Coimbatore

கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக கணேஷ் ரகுநாத் கோவைக்கு சென்றிருந்த நிலையில், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஆழியாறு பூங்காவுக்கு அவரை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது, சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை பெற்றோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்கையில், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், விசாரணை மேற்கொள்கையில் கணேஷ் ரகுநாதன் உண்மை சுயரூபம் தெரியவந்துள்ளது. 

பின்னர், இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய ஓட்டுநர் கணேஷ் ரகுநாத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.