மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி...

மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி...



CM Stalin respect to freedom fighter sankaraiyya body

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யா உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை திடீரென 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானார். இவரின் இறுதி சடங்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

CM Stalin

தற்போது அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.