முதல்வர் ஸ்டாலின் நாளை கொடியேற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும்! பரபரப்பு மிரட்டல்! செங்கல்பட்டை சேர்ந்த நபர் கைது!



cm-stalin-flag-hoisting-bomb-threat-arrest

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியேற்ற விழா தொடர்பாக அதிர்ச்சியான மிரட்டல் தகவல் பரவியது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு மர்ம அழைப்பில், கொடியேற்ற நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடிக்கும் என கூறப்பட்டதால், போலீசார் அவசரமாக நடவடிக்கை எடுத்தனர்.உடனடியாக விசாரணை ஆரம்பித்த போலீசார், அந்த அழைப்பை செங்கல்பட்டையைச் சேர்ந்த கணேசன் என்ற நபர் செய்தது என கண்டறிந்து, அவரை கைது செய்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்த அவர், மது போதையில் இருந்தபோது இந்த மிரட்டலை விடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, நாளை சென்னை நகரில் நடைபெறவுள்ள முதல்வர் ஸ்டாலின் கொடியேற்ற விழாவுக்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அனைத்து முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெற அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: "ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!

இதையும் படிங்க: "பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!