பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
கோட், சூட் அணிந்து அயல்நாட்டிற்கு சென்ற தமிழக முதல்வர், வேட்டி சட்டையுடன் தாயகம் திரும்பினார்! அதற்கு அவர் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தொழில் முதலீட்டாளர்கள், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழகத்திலிருந்து எந்த முதலமைச்சரும் அயல்நாடு செல்லவில்லை என்ற குறைபாட்டை இப்போது தீர்ந்தது.
அமெரிக்காவின் ஐ.டி. களத்தில் 35 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். உழைப்பதற்கென்றே தமிழர்கள் பிறந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு உழைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறார்கள்.
தமிழகத்தில் ஐ.டி. பூங்கா அமைப்பதற்கு நாங்கள் முன்வருகிறோம் என்று பல தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவில் தொழில் துறையில் இரண்டாவதாகவும், சிறு தொழிலில் முதல் இடத்திலும் தமிழ்நாடு இருப்பதால் தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என கூறினார்.
கோட், சூட் அணிந்து அயல்நாட்டிற்கு சென்ற முதல்வர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் தாயகம் திரும்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அயல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களை சந்திக்கும்போது, அவர்கள் உடையில் இருந்தால்தான் அது சரியாக இருக்கும். ஏனென்றால் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறோம். அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதனால் தான் அயல்நாட்டில் கோட், சூட் அணிந்தேன் என கூறினார்.