சிறுமி பாலியல் வழக்கில் கைதான ராணுவ வீரர் மீண்டும் சேட்டை செய்து சிக்கினார்.! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சமூகம்

சிறுமி பாலியல் வழக்கில் கைதான ராணுவ வீரர் மீண்டும் சேட்டை செய்து சிக்கினார்.!

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு அச்சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புதல் அளித்த பிறகு விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பணிக்குச் சென்ற அவர் விடுமுறைக்கு ஊர் திரும்பியுள்ளார். 

வந்தவர் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ளோம் என்று அடங்கியிராமல் மீண்டும் மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அவர் மீது மிகுந்த கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு உச்ச பட்ச தண்டனையை வரையறை செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo