புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!


child-sale-in-pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்ட வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்து உள்ள வேலூர் பூங்கா நகரை சேர்ந்தவர் ஹாஜி முகம்மது. இவரது மனைவி அமீனா பேகம். இந்த தம்பதிக்கு  3 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், அமீனாபேகம் தனக்கு நான்காவது பிறந்த 15 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்று விட்டதாக குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் குழந்தையின் தாய் அமீனாபேகத்திடம் விசாரணை மேற்கொண்டதில், வீட்டின் அருகே வசித்து வரும் கண்ணன் என்பவர் மூலம் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்றது தெரிய வந்தது.

      child

இதனையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் ஈரோட்டிற்கு சென்று தொழிலதிபரிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.