தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
மீண்டும் அமலாகும் ஊரடங்கு உத்தரவு... முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தோற்று மிகவும் தீவிரமாக பரவிவந்த நிலையில், தற்போது குறைந்ததால் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் நாட்டின் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு வருகின்றன.
அத்துடன் வரும் 27ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், வருவாய் பேரிடர் துறை உயர்அலுவலர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் சமுதாய மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இருந்த விதிமுறைகள் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.